Saturday, September 09, 2006

படையினரின் முன்னகர்வு புலிகளால் முறியடிப்பு

படையினரின் முன்னகர்வு புலிகளால் முறியடிப்பு: 26 படையினர் பலி! 125 படையினர் காயம்.
இன்று காலை முகமாலை முன்னரங்கப் பகுதிகளிலிருந்து படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி விடுதலைப்புலிகளின் எதிர் தாக்குதலால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை எறிகணை சூட்டதரவுடன் புலிகளின் முன்னரங்க நிலைகள் நோக்கி படையினர் நகர்வுகளை ஆரம்பித்தனர்.இதனை எதிர் கொண்ட புலிகள் உக்கிர தாக்குதலைத் தொடுத்தனர்.

பல மணி நேரம் இடம்பெற்ற சமரில் பலத்த இழப்புக்களுடன் படையினர் மீண்டும் தமது நிலைகளிற்கு திரும்பி ஒட்டமெடுத்தனர்.

இன்றைய மோதலில் சிறீலங்காத் தரப்பில் படை அதிகாரி ஒருவர் உட்பட 26 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 125 படையினர் காயங்களுக்கு உள்ளாகியதாக சிறீலங்காப் படைத்துறை வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

விடுதலைப் புலிகள் தரப்பில் எதுவித இழப்புக்களும் ஏற்படவில்லை என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் ஐ.இளந்திரையன் தெரிவித்துள்ளார்.

முகமாலை பிரதேசத்தில் இன்று அதிகாலையில் ஆரம்பமான மோதல்களில் 11 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக படைத் தரப்பினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 53க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

படையினர் முகமாலை பிரதேசத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் இதன் போது தமிழீழ விடுதலைப்புலிகள் படையினர் மீது தாக்குதல்களை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

படையினர் பதில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும் இதில் விடுதலைப்புலிகள் தரப்பிற்கு பாரிய சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
நன்ரி>பதிவு

No comments: